நாட்டு வெடிகுண்டு வீசி பாஜக பிரமுகர் படுகொலை.. ஓட ஓட விரட்டி மர்மநபர்கள் செய்த கொடூரம்.. பதற்றம்.. பரபரப்பு?!!!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2023, 9:55 am
காஞ்சிபுரம் மாவட்டம் வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.பி.ஜி.டி சங்கர். இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், மாநில பாஜக எஸ்சி & எஸ் டி பட்டியலின அணியின் பொருளாளராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடியும், தொழிலதிபருமான பிபிஜிடி குமரனின் நெருங்கிய உறவினர் பிபிஜிடி சங்கர்.
இவர் மீது ஏற்கனவே பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் காரில் சென்னையில் இருந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது , நசரத்பேட்டையில் வழி மறித்த மர்ம கும்பல் காரின் மீது நாட்டு வெடி குண்டு வீசியுள்ளது. இதில் நிலை குலைந்த கார் சிறிது தூரம் சென்று நின்று விட்டது.
பயந்து போன பிபிஜிடி சங்கர் காரில் இருந்து இறங்கி உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க சாலையில் ஓடியுள்ளார்.அப்போது அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை விரட்டி சென்று வெட்டி படுகொலை செய்து தப்பி சென்றனர்.
மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்த கொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சடலத்தை அனுப்பி வைத்தனர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பி பி ஜி டி சங்கர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள வளர்புரம் பகுதியில் ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
7 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியை சேர்ந்த குட்டி என்ற வெங்கடேசன் என்பவர் அதிமுக கட்சியின் சார்பில் பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் பாஜக கட்சிக்கு தாவினார்.
ஸ்ரீபெரும்பத்தூர் பெருந்தலைவர் குட்டி என்ற வெங்கடேசன் வெட்டி கொல்லப்பட்டு இன்று 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் பி பி ஜி டி சங்கர் அதே பாணியில் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கட்ட விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்து ஸ்கிராப் எனப்படும் கழிவுகளை எடுப்பதில் தொழில் போட்டி ஏற்பட்டு அதனால் பி பி ஜி டி சங்கரை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
0
0