ஓடும் பேருந்தில் கம்யூனிஸ்ட் கட்சி பெண் பிரமுகர் படுகொலை : தலையை வெட்டிய கொடூரம்.. தமிழகத்தில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 6:19 pm

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கணவாய்பட்டி பங்களாவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி. இவரது மனைவி தமயந்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக உள்ளார்.

கோபிக்கும் அவரது அண்ணன் ராஜாங்கத்திற்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது. இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலும் உள்ளது.

இந்நிலையில் தமயந்தி நேற்று வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல்லிற்கு வழக்கறிஞரை சந்திக்க தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அதே பேருந்தில் கோபியின் அண்ணனும் சென்று கொண்டிருந்தார். பேருந்து கோபால்பட்டி- வடுகபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாங்கம் தமயந்தியை தான் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டியதில் தலை துண்டானது.

இதை பார்த்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இதைப்பார்த்த ராஜாங்கம் தப்பி ஓடினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் எஸ்.பி.பாஸ்கரன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட போலீசார் தப்பியோடிய ராஜாங்கத்தை சம்பவம் நடந்த 20 மணி நேரத்தில் கைது செய்தனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!