இளம்பெண்ணை காதலித்த இளைஞர் படுகொலை : சடலத்தை சாக்கில் கட்டி அணை அருகே வீசிய பயங்கரம்… விசாரணையில் சிக்கிய கொலையாளிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 4:40 pm

திண்டுக்கல் : ஆத்தூர் அருகே காதல் பிரச்சினையில் இளைஞர் படுகொலை, பிணத்தை சாக்கில் கட்டி டேம் அருகே வீசிய பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் அழகுவிஜய் (வயது 24). கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

இதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன், இவரது மகன் அஜித் (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். அஜித்தினுடைய தங்கை துர்கா (வயது 17) கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அழகு விஜய் துர்காவை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இவர்களது காதல் துர்கா வீட்டாருக்கு தெரியவரவும் இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அவ்வப்போது தகறாறும் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு இருவரும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த துர்காவின் அண்ணன் அஜித் தங்கையை கண்டித்ததுடன் அவர் கண் முன்பே அழகுவிஜயை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய் உயிரிழந்தார்.

சடலத்தை சேடபட்டி அருகே உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தந்தை தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு , இருவரும் சேர்ந்து ஒரு சாக்கு பையில் கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்றுவிட்டனர்.

காலையில் அஜித் வீட்டின் அருகில் இரத்தம் இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரித்ததை அடுத்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழ்செல்வன் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சாக்கு மூட்டையில் சடலத்தை கட்டி வீசியதாக தெரிவித்ததை அடுத்து அழகு விஜய் சடலத்தை கைப்பற்றிய போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு உடற்கூற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

சாக்கு மூட்டையில் பிணம் கிடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், டி.எஸ்.பி., முருகேசன் மற்றும் செம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி துர்கா வின் தந்தை தமிழ்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 873

    0

    0