மது வாங்க பணம் தர மறுத்த வாலிபர் கொலை..!! முக்கிய குற்றவாளி கைது..!

Author: kavin kumar
26 February 2022, 2:48 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் மது வாங்க பணம் தர மறுத்த வாலிபரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் @ மூர்த்தி தனியாக தொழில் செய்து வரும் இவர் கடந்த 21 ஆம் தேதி வில்லியனூர் நத்தம் சுடுகாட்டு பகுதியில் கொலை செய்யப்பட்டிருந்தார், சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் போலிசார் இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வில்லயனூரை சேர்ந்த சஞ்சிவி மற்றும் புகழ் சேர்ந்து இக்கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சங்கரபரனி ஆற்றங்கரை அருகே பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க சென்ற போது புகழ் அங்கிருந்த முட்புதார்க்குள் புகுந்து தப்பி ஒடிவிட்டார்.

இதனால் சஞ்சிவியை மட்டும் கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சீனிவாசனிடம் பணம் இருந்தும் மது வாங்கி தர மறுத்ததால் புகழின் அறிவுறுத்துதலின் படி அவரை சுடுகாட்டு பகுதி அழைத்து வந்து பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு பணத்தை எடுத்து சென்றதாக சஞ்சிவி தெரிவித்ததை அடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து தப்பி ஒடிய புகழை கடந்த மூன்று நாட்களாக போலீசார் திவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அவர் வில்லியனூர் கூடப்பாக்கம் ரயில்வே டிராக் அருகே மறைந்திருப்பதாக தணிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு விரைந்து சென்றனர். இதில் போலீசாரை கண்ட புகழ் அங்கிருந்து தப்பி ஒட முயன்ற போது ரயில்வே டிராக்கில் விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!