நகைக்காக தனியாக வசித்த மூதாட்டி கொலை : ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீஸ்!!!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2022, 2:24 pm
கன்னியாகுமரி : நாகர்கோவிலில் நகைக்காக மூதாட்டி கொலை சம்பவத்தில் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்திற்க்குள் குற்றவாளியை கைதுசெய்த தனிப்படையினரை காவல்துறை கண்காணிப்பளர் பாரட்டுக்களை தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கவிமணி நகரை சேர்ந்தவர் பேபி சரோஜா (வயது 70). இவரது கணவர் தனியார் கல்லூரி பேராசியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
இவர்களுக்கு 4 மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணத்திற்கு பின் அவர்களது கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். கணவரின் உயிரிழப்பிற்கு பின் வீட்டில் பேபி சரோஜா மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அவரது வீட்டின் உள்ளே பேபிசரோஜாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். வீட்டின் உள்ளே கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில் ரத்த காயங்களுடன் கீழே மூதாட்டி காணப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் இது குறித்து அப்பகுதியினர் கோட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனியாக வீட்டில் இருந்த மூதாட்டி பொதுவாக கதவை மூடியபடி வீட்டில் இருப்பவர். தனக்கு தெரிந்த நபர்களை மட்டுமே வீட்டினுள் அனுமதிக்கும் நிலையில், அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலி உட்பட நகைகளை குறிவைத்து வீட்டில் புகுந்த நபர் அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதும், பின்னர் சத்தம் கேட்டது அக்கம்பக்கத்தினர் வந்தவுடன் பின்பக்கம் வழியாக தப்பி சென்றதும் தெரியவந்தது
மேலும் மூதாட்டி கழுத்தில் இருந்த தங்க சங்கிலி வீட்டின் பின்பக்கம் தரையில் கிடப்பதை போலீசார் கைபற்றி ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விசாரணை மேற்கொண்டார்,
இதையடுதது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளார் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பூதப்பாண்டி சிரமடம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
0
0