ஆண் நண்பர்களுடன் உல்லாசம் : தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொலை..சிக்கிய படுபாதகி!!
Author: Udayachandran RadhaKrishnan25 March 2022, 6:52 pm
நீலகிரி : வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்ததால் இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரைப்பேட்டையை சேர்ந்த கீதா என்பவருக்கு இருமுறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்றவர். இவர் மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு நித்தீஷ் (வயது 3) என்ற மகனும், நித்தீன் (வயது 1) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கார்த்திக் கீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதில் மூத்த மகனுடன் கோவையில் கார்த்திக் தனியா வசித்து வருகிறார். 1 வயது குழந்தை தாயுடன் ஊட்டியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி குழந்தை திடீரென மயங்கி விழுந்து விட்டது என கூறி உதகை அரசு மருத்துவமனையில் கீதா அனுமதித்தார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டதால் உதகை நகர போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்
பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைடியில் குழந்தைக்கு அதிகளவு உணவை வாயில் திணித்து மூச்சு திணறவைத்ததும், உணவில் மது கலந்ததும் அம்பலமானது.
மேலும் குழந்தையை தொட்டிலில் வைத்து ஆட்டூம் போது சுவற்றில் தலையை மோத வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் கீதாவிடம் விசாரணை நடத்தியதில், அவர் வேறு சிலருடன் தகாத தொடர்பு வைத்ததும், இதற்கு இடையூறாக இருந்த குழந்தையை கொலை செய்ததும் தெரியவந்தது.
தையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த உதகை காவல் துறையினர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முறையற்ற உறவிற்காக பெற்ற பச்சிளம் குழந்தையை தாயே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.