கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவன் கொலை : COURT கொடுத்த அதிரடி தண்டனை!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2024, 9:58 am

கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவன் கொலை : COURT கொடுத்த அதிரடி தண்டனை!

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசித்த அமுதா (36) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (32) ஆகியோர் இருவரும் திருமணம் கடந்த உறவு வைத்துள்ளனர்.

இதற்கு இடையூறாக இருந்த அமுதாவின் கணவரான நாகராஜ் (35) என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு மேற்படி இருவரும் கொலை செய்த குற்றத்திற்காக மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் 1-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை நேற்று இரவு முடிவு பெற்று கொலை குற்றவாளிகளான அமுதா (36) மற்றும் சங்கர் (32) ஆகியோர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.6000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க: நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்.. நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : GPS கருவிகள், வலைகள் திருட்டு!

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமைக் காவலர் ஆனந்தகுமார் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 246

    0

    0