பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் படுகொலை… விசாரணையில் சிக்கிய சித்தி : பகீர் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 4:59 pm

பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் படுகொலை… விசாரணையில் சிக்கிய சித்தி : பகீர் சம்பவம்!!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞரை சொத்து தகராறில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். பெண்,தந்தை மகன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்(50). இவர் திருச்சியில் உள்ள தனியார் மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார்.

இவருக்கு மூன்று மனைவிகள் முதல் மனைவி பொன்னி. இவருக்கு யுவராஜ்(22) என்ற மகனும் அபினி ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அபினி ஸ்ரீக்கு திருமணம் முடிந்து விட்டது. முதல் மனைவி இறந்த நிலையில் மங்கையர் திலகம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு ரித்திகா என்ற ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளது.இவரும் இறந்துவிட்ட நிலையில் லால்குடி அருகே பல்லபுரத்தைச் சேர்ந்த பூமதியை மூன்றாவதாக திருமணம்செய்துள்ளார்.

இவருக்கு ராதிகா, தான்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள மற்றும் சூர்யா என்ற ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். அனைவரும் தச்சங்குறிச்சி புதூர் உத்தமனூர் சாலையில் உள்ள சூர்யா ஃபார்ம் ஹவுஸ் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் கடந்த 5ஆம் தேதி மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கௌதமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு தந்தை பார்த்து வந்த வேலையை யுவராஜ் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யுவராஜை வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும் காணக்கிளியநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை குறித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் மூன்றாவது மனைவி பூமதியின் அண்ணன் சின்னையன் என்கின்ற சின்னசாமிக்கும் யுவராஜுக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யுவராஜ் உயிரோடு இருந்தால் தனது தங்கை பூமதிக்கு சொத்துக் கிடைக்காது என கருதிய சின்னசாமி யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யுவராஜை நேற்று அதிகாலையில் அறிவாளால் தலை முகம் மற்றும் கைப்பகுதியில் வெட்டி படுகொலை செய்தனர்.

இதனையடுத்து போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் லால்குடி அருகே பல்லப்புரம் வடக்கு தெருவை சேர்ந்த பூமதியின் அண்ணன் 54 வயதான சின்ன சாமி,அவரது மகன் 22 வயதான வல்லரசு, மூன்றாவது மனைவி 43 வயதான பூமதி, லால்குடி அருகே புதூர் உத்தமனூர் தென்னைமர சோலையைச் சேர்ந்த 47 வயதான சுப்பிரமணியன், சமயபுரம் அருகே கொணலை கல் பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த 35 வயதான ஸ்டீபன் ஆரோக்கியராஜ் மற்றும் புரத்தாக்குடியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஜெக செல்வன் ஆகியோர் யுவராஜை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காணக்கிளியநல்லூர் போலீசார் 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Surya Retro Movie OLD BUT MASS..சூர்யா 44 படத்தின் மிரட்டலான டைட்டில்…சம்பவம் செய்த டீசர்.!
  • Views: - 545

    1

    0