தம்பி மீது கொலைவெறி தாக்குதல்.. தடுக்க வந்த கொழுந்தியாளுக்கு கத்திக்குத்து : அண்ணன் வெறிச்செயல்.. விசாரணையில் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 9:34 am

தம்பி மீது கொலைவெறி தாக்குதல்.. தடுக்க வந்த கொழுந்தியாளுக்கு கத்திக்குத்து : அண்ணன் வெறிச்செயல்.. விசாரணையில் ஷாக்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட ஆரியமுத்துப்பட்டி கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மூத்த மகன் திருமலை இரண்டாம் மகன் அருணாச்சலம் மூன்றாவது மகன் பக்தாச்சலம். இதில் அருணாச்சலம் மற்றும் பக்தாச்சலம் இருவரும் கட்டிட தொழில் செய்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு முன் இருக்கும் குடிநீர் குழாவால் ஏற்பட்ட பிரச்சனையில் அருணாச்சலத்தின் மனைவியும் பக்தாச்சலத்தின் மனைவியும் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

மின் இணைப்பு பிரச்சனை, குடிநீர் குழாய் பிரச்சனை சம்பந்தமாக பக்தாச்சலம் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்

இது சம்பந்தமாக அண்ணன் அருணாச்சலம் ஆத்திரமடைந்து கத்தியால் தம்பி பக்தாச்சலத்தையும் அவர் மனைவி சாரதியையும் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளார்

இதனை கண்ட பக்தாச்சலம் மகனும் மகளும் கூச்சலிட்டதில் அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் இருந்த கணவன் மனைவி இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கணவன் மனைவி இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் அருணாச்சலத்தை தேடிச் சென்றபோது அருணாச்சலம் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக குடியாத்தம் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டு குழாய் பிரச்சனையால் அண்ணன் தம்பி மற்றும் தம்பி மனைவியை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 466

    0

    0