பெண் காவலரிடம் அவதூறாக நடந்துகொண்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனை தாய் மற்றும் மனைவி நளினி ஆகியோர் சந்தித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன் உச்சநீதிமன்ற உத்தரவுபடி கடந்த 12.11.2022 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் முருகன் வேலூர் மத்திய சிறையில் இருந்த போது கடந்த 2020 ஆம் ஆண்டு சிறையில் ஆய்வுக்கு சென்ற பெண் காவலரிடம் அவதூறாக நடந்து கொண்டதாக மத்திய சிறை துறை அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு வேலூர் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4- ல் நடைபெற்று வருகிறது. முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதாலும் விடுதலைக்கு பிறகு தற்போது திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபப்பட்டு வரும் முருகன், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 4-ல் ஆஜர் படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 22.02.2023 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனை அடுத்து முருகன் மீண்டும் திருச்சி சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்க்கிடையில் நீதிமன்ற வளாகத்தில் முருகனை, அவரது தாயார் சோ.மணி, மனைவி நளினி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
This website uses cookies.