வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்…? பரோல் வழங்கக்கோரி வலியுறுத்தல் : மறுக்கும் அதிகாரிகள்..!!
Author: Babu Lakshmanan15 March 2022, 7:58 pm
வேலூர் : பரோல் வழங்கக்கோரி வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, நளினி பரோலில் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இதற்கிடையில், நளினியின் தாய் பத்மா முருகனுக்கு பரோல் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் பரோல் வழங்கக்கோரி இன்று காலை சிறை நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் உணவுகளை சாப்பிடாமல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறை நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கடிதம் கொடுத்தால், முருகன் உண்ணாவிரதம் இருப்பதாக தெரிவிக்கப்படும். தற்போது அனுமதி கடிதம் கொடுக்காமல் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளது. சிறை விதிகளுக்கு புறம்பானது. ஆகையில் சிறை நிர்வாகத்தை பொறுத்தவரை முருகன் உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை,” என்றனர்.
0
0