பழனியில் துவங்கிய ‘முத்தமிழ் முருகன் மாநாடு’.. 2 நாட்களுக்கு மூன்று வேலையும் தடல்புடலாக தயாராகும் உணவுகள்..!
Author: Vignesh24 August 2024, 2:22 pm
பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 1 லட்சம் பேருக்கு தயார் செய்யும் பணியில் 500 ககும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள்.
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மாநாட்டுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் ஆதீனங்கள் உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இரண்டு நாட்களுக்கு மூன்று நேரம் இலவச உணவு வழங்க இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.

அதற்காக பிரத்தியேகமாக எட்டு இடங்களில் உணவு கூடங்கள் மற்றும் 500க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஆகியோர் பிரமாண்டமாக உணவு சமைத்து வருகின்றனர். வெளிநாட்டவர்க்கு தேவையான உணவு வகைகள், உள்நாட்டு பிரமுகர்களுக்கு தேவையான உணவு வகைகள், என பல்வேறு விதங்களில் பல்வேறு வகைகள் உணவுகளை தயார் செய்யும் பணியில் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு இருந்து மாநாட்டுக்கு கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காலை உணவாக சாகி துக்கடா இளநீர் இட்லி தஞ்சாவூர் மிளகு முந்திரி பொங்கல் நெய் பொடி ரோஸ்ட் பன்னீர் பூஜ்ஜியா மோதி பூரி என காலை உணவாகவும் இரவு உணவாக ஹாட் பாம்பே ஜாங்கிரி பனைவெல்லம் மைசூர்பா வெஜ் மஞ்சூரியன் மினி ஆனியன் சமோசா தக்காளி சாஸ் காஞ்சிபுரம் இட்லி கருவேப்பிலை குழம்பு மைசூர் மசாலா தோசை வெஜ் ஆம்லெட் உடுப்பி கி சாம்பார் செட்டிநாடு கார சட்னி ஆம்பூர் வெஜ் மட்டம் தம் பிரியாணி மஸ்ரூம் பள்ளி பாளையம் கிரேவி சாமை அரிசி தயிர் சாதம் என பல்வேறு வகை ஆகும்.
என்ன பல்வேறு விதங்களில் மக்களுக்கு இலவசமாகவும் உணவுகள் ஆங்காங்கே அமர்ந்து சாப்பிடும் வகையில் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம் , குங்குமம் , விபூதி ,லேமினேசன் செய்யபட்ட முருகன் போட்டோ வழங்க பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.