‘மை வி3 ஆட்ஸ்’ செயலி முடக்கம்… பணம் வராமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள் ; சக்தி ஆனந்தை சிறையில் அடைக்க உத்தரவு
Author: Babu Lakshmanan11 February 2024, 10:44 am
மை வி3 ஆட்ஸ்” நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்ட நிலையில், ‘மை வி3 ஆட்ஸ்’ செயலி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோவை வெள்ளகிணறு பகுதியில் MyV3 Ads நிறுவனம் செயல்பட்டு வருகிறது. My V3 Ads நிறுவனம் போலியாக மக்களை ஏமாற்றி பண மோசடி ஈடுபட்டு வருவதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருப்பதால் புகாரை எழுதி வாங்கி கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு வலியுறுத்தினர்.
ஆனால் காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, சக்தி ஆனந்தனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும், “மை வி3 ஆட்ஸ்” நிறுவனர் சக்தி ஆனந்தன் கைது செய்யப்பட்ட நிலையில், ‘மை வி3 ஆட்ஸ்’ செயலி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பணம் வராமல் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். மேலும், செயலி முடக்கப்பட்டதால் போட்ட பணம் அவ்வளவு தானா..? என்ற பயணத்தில் இருந்து வருகின்றனர்.