உலகநாயகனுக்காக எழுதிய கதையை இவரை வைத்து எடுக்க ஆசை… மனம் மாறிய இயக்குனர் மிஷ்கின்..!

Author: Vignesh
1 October 2022, 1:30 pm

நடிகைகள் ஆண்ட்ரியா, பூர்ணா மற்றும் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், அஜ்மல் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிசாசு 2 திரைப்படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தான் வைத்திருக்கும் கதை பற்றி இயக்குநர் மிஷ்கின் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடித்திருந்த யூத் திரைப்படத்தில் மிஷ்கின் இணை இயக்குநராக பணியாற்றி இருப்பார். அந்தப் படம் எடுக்கப்பட்டபோது முதல் ஆறு மாதங்கள் விஜய்யிடம் இவர் பேசவே இல்லையாம். திடீரென்று ஒரு நாள் இவரது கையைப் பிடித்த விஜய் என்ன என்னிடம் பேச மாட்டீர்களா என்று கேட்டதற்கு உங்களுக்காக கதை எழுதி இருந்தால் உங்களிடம் பேசலாம். வேலையின் பரபரப்பினால்தான் பேசவில்லை என்று மிஷ்கின் கூறிவிட்டு வேலையை பார்க்கச் சென்றுவிட்டாராம்.

அதன் பிறகு சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கியிருந்த மிஷ்கின் அதனின் பிரெவ்யூ ஷோவை விஜய்யிடம் போட்டுக் காண்பித்துள்ளார். படத்தைப் பார்த்த விஜய், இந்தக் கதையை என்னிடம் ஏன் கூறவில்லை என்று கேட்டாராம். அதற்கு உங்களை நினைத்து எழுதிய கதைதான் சித்திரம் பேசுதடி என்று கூறியவுடன் மிஷ்கினின் கழுத்தைப் பிடித்து லிஃப்டின் சுவரில் தள்ளி என்னிடம் கதையை கூறி இருக்கலாம்ல என்று அன்புடன் கோபப்பட்டாராம் விஜய்.

vijay - Updatenews360

அதற்கு, உங்களிடம் கூறி இருந்தால் உங்களது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு 18 காட்சிகளையும் நீங்கள் ஒரு 18 காட்சிகளையும் மாற்றி இருப்பீர்கள். நான் தற்கொலைதான் செய்திருக்க வேண்டும் என்று கூறினாராம். அஞ்சாதே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தன்னை இயக்கும் வாய்ப்பை மிஷினுக்கு கொடுத்திருந்தார்.

அப்போது புத்தரை அடிப்படையாக வைத்து மிகப் பெரிய பொருட்செலவில் கதை ஒன்றை தயார் செய்திருந்தார் மிஷ்கின். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படாமலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் மிஷ்கின் தன்னுடைய படத்தையும் கமலஹாசன் தசாவதாரம் படத்திலும் பிசியாகிவிட்டார். எனக்கு கதை வைத்துள்ளீர்களா என்று கேட்ட விஜய்யை வைத்து படம் பண்ண ஆசைதான். ஆனால் அவரை வைத்து நான் வழக்கமாக எடுக்கும் பரிசோதனை படங்களை எடுக்க முடியாது.

துப்பறிவாளன் போன்ற கமர்சியல் படங்களைத்தான் எடுக்க முடியும். நான் கமலுக்காக எழுதிய அந்த புத்தர் பற்றிய கதையை விஜய்யை வைத்து எடுக்க விருப்பப்படுகிறேன். காரணம், அது பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய படம் என்று மிஸ்கின் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.

  • thug life single release on 25 or 27th april தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?