தமிழ் சினிமா தற்போது பெரும்பாலும் ஹீரோக்கள் கண்ட்ரோலில் தான் இருக்கும். அவர்களுக்கு ஏற்றார் போல கதைக்களங்களும் அமைக்கப்படும். இதனை உச்ச நட்சத்திரங்கள் அல்ல, வளரும் இளம் நடிகர்களே தங்களுக்கு மாஸ் காட்சி, பாடல் வேண்டும் என கேட்கும் அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்துள்ளது. ஆனால், அதனை கட்டுப்படுத்தி அவ்வப்போது தமிழ் சினிமாவை நல்ல பாதையில் வண்டியை திருப்புவது ஒரு சில நல்ல இயக்குனர்களே. அவர்களில் ஒருவர் தான் மிஷ்கின். இவர் படத்தில் யார் நடித்தாலும் அவர்கள் மிஷ்கின் கதையை ரசிகர்களுக்கு கூறும் ஓர் கருவியாக மட்டுமே பயன்படுத்த பட்டிருப்பர்.
அது தனித்துவமாக இருக்கும். மிஷ்கின் படத்தில் விஷால், சேரன் நரேன், ஜீவா, பாவனா, பூர்ணா, அதிதி ராவ், நித்யா மேனன் என யார் நடித்தாலும் அவர்களின் மற்ற படங்களின் சாயல் சுத்தமாக இருக்காது. அவர்கள் மிஷ்கின் கூறும் வசனத்தை மிஷ்கின் பேசினால் எப்படி பேசுவரோ அப்படியே பேசியிருப்பர்.
அப்படி அவர் அவர் அளித்த ஒரு பேட்டியில் மிஷ்கின் கூறியதாவது, நடிகர்கள் கேமிரா முன் ஒரு மேஜிக் செய்ய போகின்றனர். அவர்களை நாம் தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். நடிகர். நடிகைகளிடம் நடிப்பை வாங்க ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறேன். அப்படி தான் அவர்களை கரெக்ட் பண்ணுவேன் என வெளிப்படையாக பேசினார். மேலும், அவர்களுக்கு கால் அமுக்கி விடுவேன்.
கொஞ்சுவேன் என் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை கேட்டு பாருங்கள் தெரியும்.
எனக்கு பிடித்த ஹீரோயின் என்றால் அது பாவனா தான் முதல் பட ஹீரோயின் அடுத்து நித்யா மேனன், அவள் ஒரு பேய் எவ்வளோ கொடுத்தாலும் பத்தாது நடிப்பு ராட்சசி என பலரை பற்றியும் வெளிப்படையாக பேசினார்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.