அடுத்தடுத்து வனவிலங்குகள் மர்ம மரணம்.. 30 வயது ஆண் யானை உயிரிழப்பு : ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலா? வனத்துறை விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2022, 7:11 pm

கோவை : மாங்கரை அருகே 30 வயது யானை உயிரிழந்த நிலையில் ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கம் என வனத்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.

கோவை மாங்கரை அருகே நேற்றைய தினம் இறந்து மூன்று நாட்களான 30 வயதுடைய ஆண் யானை உயிரிழந்த கண்டறியப்பட்டது. யானையின் உடலிலிருந்து சேகரிப்பட்ட கழிவு மற்றும் மாதிரிகள் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பபட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொற்றுநோய் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உடற்கூடாராய்வு மேற்கொள்ளபடும். சோதனை முடிவு வர 48 மணி நேரம் ஆகும் எனவும் அதுவரை யானையை சுற்றி ஐம்பது மீட்டர் சுற்றளவிற்கு பாதுகாப்பு போடப்படுள்ளது.

நோய் தொற்று ஏற்படிருக்கலாம் என சந்தேகம் இருப்பதால் பி.சி.ஆர் பரிசோதனைக்காக யானையிலிருந்து சேகரிப்பட்ட கழிவு மாதிரிகள் அனுப்பட்டுள்ளது.நேற்று நடந்த ரத்த பரிசோதனையில் சரியான முடிவு வராததால் சென்னைக்கு சோதனைக்கு அனுப்ப வனத்துறை முடிவு செய்துள்ளனர்.

ஆந்தராக்ஸ் நோய் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை மருத்துவர்கள் சந்தேகிப்பதன் காரணமாக யானையின் கழிவு மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1200

    0

    0