ஈஷா மையத்தில் இருந்து மாயமான பெண் சடலமாக மீட்பு : விசாரணையில் அதிர்ச்சி… கோவையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2023, 2:03 pm

கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான பெண் சுபஶ்ரீ செம்மேடு அருகே உள்ள கிணற்றில் சடலமாக மீட்பு.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார், இவரது மனைவி சுபஶ்ரீ இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சுபஶ்ரீ கடந்த டிச.11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்தார், பின்னர் 18 ஆம் தேதி அவரை அழைத்துச் செல்ல கணவர் வந்த போது சுபஶ்ரீ மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவரது கணவர் அளித்த புகார் அடிப்படையில் ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்தில் இருந்த கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்ட போது, அது மாயமான சுபஶ்ரீ என்பது தெரியவந்தது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ