மாயமான சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 11:00 am

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ஏழு வயது மகள் அதிசயாவை காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் சத்யா அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக பூட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த சிசிடிவி காட்சியில் சத்யா தனது குழந்தை அதிசயாவை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சியும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சத்யா மட்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சங்கராபுரம் போலீசார் அதிசயாவின் தாய் சத்யாவிடம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று அவரிடம் துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தனது மகள் அதிசயாவை வீட்டிலிருந்து அதே கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்துச் சென்று அதிசயாவை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி அதிசயவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,

குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் சத்யாவை சங்கராபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து சிறுமியின் தாய் சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி சத்யா இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ஏழு வயது மகள் அதிசயாவை காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் சத்யா அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக பூட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அந்த சிசிடிவி காட்சியில் சத்யா தனது குழந்தை அதிசயாவை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சியும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சத்யா மட்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சியும் பதிவாகி இருந்தது இதனால் சந்தேகம் அடைந்த சங்கராபுரம் போலீசார் அதிசயாவின் தாய் சத்யாவிடம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று அவரிடம் துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தனது மகள் அதிசயாவை வீட்டிலிருந்து அதே கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்துச் சென்று அதிசயாவை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி அதிசயவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் சத்யாவை சங்கராபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து சிறுமியின் தாய் சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!