மர்மம் நிறைந்த மஞ்சவாடி கணவாய்.. தொப்பூருக்கே டஃப்.. லாரி உரிமையாளர் உயிரிழப்பு… உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்!
Author: Udayachandran RadhaKrishnan23 March 2024, 4:52 pm
மர்மம் நிறைந்த மஞ்சவாடி கணவாய்.. தொப்பூருக்கே டஃப்.. லாரி உரிமையாளர் உயிரிழப்பு… உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள நெடுங்கல்லை சேர்ந்தவர் ரமேஷ் (44). கண்டெய்னர் லாரியின் உரிமையாளரான இவர், அவரே டிரைவராகவும் இருந்து வந்தார்.
இன்று சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு மேட்டூருக்கு வந்து கொண்டிருந்தார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது.உடனடியாக லாரியில் இருந்து தப்பிக்கும் வகையில் ரமேஷ் கீழே குதித்து போது எதிர்பாராதவிதமாக லாரி அவர் மீது விழுந்ததில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இரும்பு கம்பிகளை அகற்றினர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியின் அடியில் சிக்கி உயிரிழந்த ரமேஷின் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த பொதுமக்கள் கூறுகையில், தொப்பூர் கணவாய் பகுதியை போல் மஞ்சவாடி கணவாய் பகுதிகளிலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். தற்போது கோணலான சாலைகள் அனைத்தும் சீரமைப்பு பட்ட நிலையிலும் கூட விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டுதான் வருகின்றது. இதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
மஞ்சவாடி கணவாய் பகுதியில் வரும் லாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதின் மர்மம் இதுவரையில் என்னவென்று தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்