விடாமல் துரத்திய மர்ம ஆசாமி.. அலறிய பெண்கள் : கோவையில் நடந்த பகீர் சம்பவம்..(வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2025, 6:39 pm

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று விடுதிக்கு சென்று கொண்டு இருந்த போது, அவர்களை பின் தொடர்ந்து வந்த 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், விடுதியில் இருந்த தனியார் காவலரை தாக்கி மகளிர் விடுதுக்குள் நுழைய முற்பட்டு உள்ளார்.

இதையும் படியுங்க: மீண்டும் ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு கொடுமை… உதவிய 139 : தூத்துக்குடி – ஈரோடு ரயிலில் ஷாக்!

மர்ம நபர் தாக்கியதில் பலத்த காயமடைந்த காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விடுதி உரிமையாளர் தரப்பில் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தும் காவல் துறையின் வர காலதாமதம் ஏற்பட்டதால் மர்ம நபர் அங்கு இருந்து தப்பி ஓடினார்.

mysterious man who followed women Shocking Video

இதுகுறித்து இன்று காலை மீண்டும் கோவை விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சரணம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்பொழுது தனியார் விடுத சங்கத்தின் சார்பாக கோவை மாநகர அவள் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளனர்.

பெண்களை பின்தொடர்ந்து மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

  • ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!
  • Leave a Reply