மது அருந்தி விட்டு பிளாஸ்டிக் குடோனுக்கு தீ வைத்த போதை ஆசாமி : கட்டுக்கடங்காத தீ… 5 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 March 2022, 2:40 pm

விழுப்புரம் : நகராட்சி குப்பை கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்தனர்.

விழுப்புரம் நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றை பல்வேறு இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நகரில் குப்பை சேகரிக்கும் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள குப்பை சேகரிக்கும் கிடங்கில் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் புகைமூட்டமாக காட்சியளித்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து கொழுந்து விட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர், ஆனால் தீ கட்டுக்கடங்காமல் காற்றின் வேகம் அதிகரித்ததால் குப்பை கிடங்கு முழுவதும் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மேலும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரைக் கொண்டு பீச்சி அடித்து 4 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதனால் சுற்று வட்டார பகுதிகளில் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

சம்பவம் குறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை செய்தபோது அந்த பிளாஸ்டிக் கழிவு சேமிப்பு குடோனில் பின்புறம் சமூக விரோதிகள் சிலர் அங்கு அமர்ந்து குடித்துவிட்டு பின்னர் தீ வைக்கப்பட்டு எரித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சேமிப்பு குடோன் சுற்றி உள்ள ஏரி பகுதிகளை ஒரு சிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் கழிவு சேமிப்புக்கு கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!