நள்ளிரவில் நடந்து சென்ற திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்த மர்மநபர்கள் : ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்திக்குத்து!!
Author: Udayachandran RadhaKrishnan8 May 2022, 5:35 pm
கோவை : நள்ளிரவில் தனியாக சென்று கொண்டிருந்த திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து கத்தியால் குத்திய டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை சூலூர் பள்ளாளையம் பகுதியில் வசித்துவருபவர் தர்ஷா. இவர் சோனா என்ற திருநங்கையின் பாதுகாப்பில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
தர்ஷா வழக்கமாக திருநங்கைகளுடன் சேர்ந்து போக்குவரத்து சிக்னல்களில் யாசகம் செய்துவருவதை வழக்கமாக கொண்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று மாலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் மற்ற திருநங்கைகளுடன் இணைந்து யாசகம் செய்தவர் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சூலூர், பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது கோவை ஒண்டிபுதூர் மிராஜ் தியேட்டர் அருகே வந்துகொண்டு இருந்த திருநங்கை தர்ஷாவை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இருவர் தர்ஷாவை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளனர்.
இதற்க்கு மறுப்பு தெரிவித்த தர்ஷாவை மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதில் அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த தர்ஷா கத்தி கூச்சலிட்டிருக்கின்றார்.
இதனால் பொதுமக்களிடம் சிக்கிவிடுவோமோ என மர்ம நபர்கள் நினைத்து திருநங்கை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றிருக்கின்றனர்.
இதில் திருநங்கை தர்ஷாவின் கை மற்றும் கழுத்தில் ஆழமாக கத்திகுத்து ஏற்பட்டதில் தர்ஷா வலிதாங்காமல் அலறியுள்ளார். கத்தியால் குத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர்.
அந்த வழியாக ரோந்து வந்த சிங்காநல்லூர் போலீசார் தர்ஷாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதற்குள் தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த திருநங்கைகள் தர்ஷாவை தொடர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போலிசாரின் முதற்கட்ட விசாரனையில் திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து கத்தியால் குத்தியது கோவை நீலிக்கோனாம்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் வேலைபார்க்கும் மேகனாதன் மற்றும் பூபாலன் என்பது தெரியவந்துள்ளது.
இவர்களை பிடிக்க போலிசார் இரண்டு தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த மேகநாதன் மற்றும் பூபாலன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
உல்லாசத்திற்கு மறுத்த திருநங்கையை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காமல் உள்ள திருநங்கைகளுக்கு உரிய வேலை வாய்ப்பும், பாதுகாப்பு தர தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு திருநங்கைகள் வலியுறுத்தினர்.