மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்.. நொடியில் கேட்ட அலறல் சத்தம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 6:15 pm

மூதாட்டியை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்.. நொடியில் கேட்ட அலறல் சத்தம் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

கோவை சின்னியம்பாளையம் பி.எல். எஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி(வயது 68). இவர் நேற்று காலை 11 மணி அளவில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி கொண்டு இருந்தார்.

அப்போது பானுமதியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், பானுமதி அணிந்து இருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு தப்பி ஓடினார்.இந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில் பானுமதி நடந்து செல்வதும், பின் தொடர்ந்து வரும் நபர் பானுமதியின் கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்து செல்வதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

https://vimeo.com/869533788?share=copy

இது குறித்து பானுமதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 508

    0

    0