திமுக கொடி கட்டிய சொகுசு காரில் ஆடுகளை கடத்தும் மர்மநபர்கள் : ஷாக் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 1:08 pm

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் குமார். பிளம்பராக வேலை செய்து வருகிறார். மேலும், தனது வீட்டில் ராமநாதபுரம் வகை ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இதேபோல் இவரது உறவினரான கணேசன் என்பவரும் இவ்வகை ஆடுகளை வளர்த்து வருகிறார். குமார் வேலைக்கு சென்று விட்ட நிலையில் கணேசன் நேற்று மாலை கீதாபுரம் தடுப்பணை அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

ஆடுகளுக்கு இலை தழைகளை வெட்டிப் போட்டுக் கொண்டிருந்தார். மேலும் அங்கிருந்த சினைஆடுகளை வீட்டிற்கு விரட்டி விட்டார்.

மேலும் படிக்க: 21 வயது பெண் நடனக் கலைஞரை மிரட்டி பலமுறை உல்லாசம்.. தேசிய விருது பெற்ற டான்ஸ் மாஸ்டர் மீது பகீர் புகார்!

வீட்டிற்கு வந்த கணேசன் ஆடுகளை பட்டியல் அடிக்கும்போது 3 சினை ஆடுகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கணேசன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சினையாடுகள் அனைத்தும் அவர் வீட்டருகே சென்று கொண்டிருந்த போது திமுக கொடி கட்டிய வெள்ளை நிற ஃபார்ச்சூனர் காரில் வந்த மர்ம கும்பல் காரில் இருந்து இறங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று ஆடுகளை காரில் ஏற்றிக் கொண்டு திருடி சென்றது தெரியவந்தது.

சிசிடிவியின் காட்சியின் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே போன்ற சம்பவம் அடிக்கடி இப்பகுதியில் நடந்து வருவதால் காவல்துறையினர் ஆடு திருடும் கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 185

    0

    0