நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி.. வைரல் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2024, 10:59 am

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி..(ஷாக் வீடியோ)!

கோவை சூலூர் அருகே வாகராயம்பாளையத்தில் வசிப்பவர் கலாமணி (60). இவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால்  இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கலாமணி அணிந்திருந்த செயினை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலாமணி அவர்களை பிடியுங்கள் பிடியுங்கள் என உரக்க கூறியுள்ளார்.

அப்பகுதி இளைஞர்கள் இருசக்கர வாகன திருடர்களை துரத்தினர் ஆனால் பிடிக்க முடியவில்லை. அங்கு வந்து பார்த்தபோது கலாமணி மீண்டும் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தார்

இது பற்றி கேட்டவுடன் அவர் போனால் போகுது அது கவரிங் நகை தானே என கூறியதும் துரத்திச் சென்ற இளைஞர்கள் சிரித்தபடி தங்கள் துரத்தி இதை எண்ணி அங்கிருந்து சென்றனர்.

பாவம் திட்டம் போட்டு திருடிய மர்ம நபர்கள் ஏமாந்து போனார்கள் என கலாமணி அங்கிருந்த பொதுமக்களிடம் கூறி சிரித்தார். இது பற்றி வழக்கு பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் மர்ம நபர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது கலாமணி இடம் திருடிய கண்காணிப்பு கேமராக்கள் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!