சிறுமி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… பிறந்தநாள் விழாவில் நடந்தது என்ன? பெற்றோர்கள் சந்தேகம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 3:59 pm

சிறுமி மரணத்தில் நீடிக்கும் மர்மம்… பிறந்தநாள் விழாவில் நடந்தது என்ன? பெற்றோர்கள் சந்தேகம்!

கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியை சேர்ந்தவர் செண்பகவல்லி. இவர் மழலையர் பள்ளியில் ஆசிரியை. இவர் கணவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். 9 வயதான மகள் கோகுல பிரியா பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். அங்கே சிறுமி கோகுல பிரியா சென்று உள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் மற்ற சிறார்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.கோகுல பிரியாவை காணவில்லை. பெற்றோர் அங்கே சென்று தேடிய போது நீர் தொட்டியில் சிறுமி மயங்கி நிலையில் கிடந்தார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக பேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி இறந்து கிடந்த நீர் தொட்டி திறந்த நிலையில் கிடந்து உள்ளதாக கூறப்படுகிறது. இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சிறுமியின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுமி வீட்டிற்கு வராத நிலையில் அவரின் செருப்புகளை வீட்டின் முன் போட்டு சென்றனர். சிறுமியை காணவில்லை என நாங்கள் தேடிய போது நீர் தொட்டியை பார்க்க அங்கே இருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

சிறிய துவாரம் கொண்ட தொட்டியில் சிறுமி விழ வாய்ப்பில்லை. அங்கே என்ன நடந்தது, எப்படி அவர் இறந்தார்? என விசாரிக்க வேண்டும். இந்த இறப்பில் மர்மம் இருக்கிறது.

இதை போலீசார் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயரளவிற்கு நடந்த விவரங்களை மூடி மறைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 300

    0

    0