வாகனத்தை நள்ளிரவில் திருடும் மர்ம ஆசாமிகள்; வெளியான சிசிடிவி வீடியோ…

Author: kavin kumar
2 February 2022, 1:12 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கவிகுயில் நகரை சேர்ந்தவர் மஹாலிங்கம் (37). இவர் டாடா ஏஸ் லோடு கேரியர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது வாகனத்தை காமராஜர் சாலையில் உள்ள கூட்டுறவு வளாகத்திற்கு எதிரே நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அது போல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று பின்னர் காலை வந்து பார்த்த போது அந்த இடத்தில் டாடா ஏஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

இது குறித்து உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் இரவு டாடா ஏஸை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்ததை அடுத்து, அதனை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 2298

    0

    0