புதுச்சேரி: புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கவிகுயில் நகரை சேர்ந்தவர் மஹாலிங்கம் (37). இவர் டாடா ஏஸ் லோடு கேரியர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் தனது வாகனத்தை காமராஜர் சாலையில் உள்ள கூட்டுறவு வளாகத்திற்கு எதிரே நிறுத்தி விட்டு செல்வது வழக்கம். அது போல் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று பின்னர் காலை வந்து பார்த்த போது அந்த இடத்தில் டாடா ஏஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,
இது குறித்து உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் இரவு டாடா ஏஸை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்ததை அடுத்து, அதனை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவை வைத்து இயக்கியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குடி பகுதியில் ரூபாய் 18 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகளுக்கான பூமி…
கோவை டவுன்ஹால் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் என்பவரது மகள் 23 வயதான சூர்யா இவர் வேலை செய்து வரும் நிறுவனத்தில்…
This website uses cookies.