ஆயிரம் ஓட்டுக்களை வாங்கிய நாம் தமிழர்.. ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் : முன்னிலை நிலவரம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2025, 9:28 am

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது இதில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 46 பேர் போட்டியிட்டனர்.

இதில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கி எண்ணப்பட்டு வருகிறது.

தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள அறை தேர்தல் பார்வையாளர்கள் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு 7.30 மணி முதல் தபால் வாக்குகள் என்னும் பணி தொடங்கும் இதனை தொடர்ந்து 8 மணிக்கு மின்னணு வாக்கு பகுதி இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு 8.30 மணிக்கு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

85 வயதுக்கு மேற்பட்டோர் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் சிறையில் உள்ளவர்கள் என 246 பேர் தபால் வாக்குகள் அளித்துள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஆண் வாக்காளர்கள் 74260 பெண் வாக்காளர்கள் 80376 இதர வாக்காளர்கள் 21 பேர் என மொத்தம் 154657 பேர் வாக்களித்துள்ளனர்.

இதையும் படியுங்க : டெல்லியில் சொல்லி அடிக்குதா பாஜக? ஆரம்பம் முதலே அட்டகாசம்.. தேர்தல் முடிவுகள்!

மின்னணு வாக்கு என்னும் அறையில் 14 மேஜைகல் தபால் வாக்கு எண்ணிக்கைக்கு 1 மேஜை என மொத்தம் 15 மேஜைகல் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் 3 பேர் என 53 பேர் வாக்குகள் என்னும் பணியில் ஈடுபடுகின்றனர்.

பாதுகாப்பிற்காக 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர CISF வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Erode

வாக்குகள் எண்ணப்பட்டது முதலே திமுக முன்னிலையில் உள்ளது. எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் சீதாலட்சுமி கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். தற்போது வரை திமுக வேட்பாளர் சந்திரகுமார் 8,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 1,081 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

Erode East By Election Results

பெரியார் குறித்து சீமான் அவதூறு, விடுதலைப் புலிகளுடனான விவகாரம் தொடர்பாக நாதகவுக்கு ஓட்டுகள் குறைந்துள்ளதாக அரசியல் விமர்சகள் கருதுகின்றனர்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!