நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
சென்னை: சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா, அதிமுக ஐடி பிரிவு இணைச் செயலாளராக உள்ள நிர்மல் குமார் ஆகியோர் வந்தனர்.
இவர்கள் இருவரும் தவெகவில் இணைந்த பிறகு, அவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது. அதேபோல், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக அறியப்படும் பேச்சாளர் ராஜ்மோகனும் பனையூர் அலுவலகம் வந்துள்ளதாகல், அவரும் தவெகவில் இணைந்த பிறகு முக்கிய பொறுப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை காளியம்மாள் மறுத்துள்ளார் என தனியார் செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. இருப்பினும், காளியம்மாள் சமீப காலமாக நாதகவில் அதிருப்தியில் உள்ளதால், மிக விரைவில் அவரும் இணைவார் எனக் கூறப்படுகிறது.
இந்த இடத்தில், அதிமுக, விசிக ஆகிய கட்சிகளின் முன்னாள் நிர்வாகிகளைத் தூக்கிய தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு சற்று நிதானம் காட்டுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், சீமானின் பெரியார் எதிர்ப்பு பேச்சு, பிரபாகரன் உடனான சீமானின் சந்திப்பு கேள்விக்குறியானது ஆகியவை நாதகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் : ரூட்டை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!
ஏற்கனவே, மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகி வந்த நிலையில், தற்போது மாநிலப் பொறுப்பாளர் ஜெகதீசன் பாண்டியன் விலகியுள்ளார். இதுபோன்று முக்கிய நிர்வாகிகள் விலகினால், நாதக ஆட்டம் காணும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதேநேரம், நாதக நிர்வாகிகள் அவர்களாகவே வெளியேறுவது புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாக்கு வங்கியை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.