வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு : நீண்ட நேரம் காக்க வைப்பதாக புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 2:15 pm

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு : நீண்ட நேரம் காக்க வைப்பதாக புகார்!!

மதுரை நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சத்யா தேவி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வருகை தந்தார்.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலையில் மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வழியில் திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு சிறிது நேரம் காவல்துறை உதவியுடன் அங்குள்ள நாற்காலியில் அமர வைத்து நீர் ஆதாரங்கள் கொடுக்கப்பட்டு அக்கட்சி தொண்டர்கள் வாகனம் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

நீண்ட நேரம் நிற்க முடியாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அறை அருகே காத்திருந்து வருகிறார். காலையில் 11:20 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவி இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதில் சில குழப்பம் நீடித்து வருகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…