தேர்தலில் மாஸ் காட்டிய சீமான்.. அள்ளிக் குவித்த வாக்குகள்; அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி..!

Author: Vignesh
5 June 2024, 9:47 am

2024 நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒடிசாவில் 147 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

seeman

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 292 இடங்களில் மக்களவைத் தொகுதிகளாக கைப்பற்றியது. எனினும், பாஜகவால் 272 என்ற தனி பெரும்பான்மை எண்ணிக்கை பெற முடியவில்லை. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டும் 240 தொகுதிகளை கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Seeman

மேலும் படிக்க: நான் இந்த தேர்தல்ல தோற்றிருக்கலாம்.. ஆனால் நான் இன்னும் தோற்கவில்லை : நம்பிக்கை கொடுத்த கோவை அதிமுக வேட்பாளர்!

இந்நிலையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகார பெற எட்டு சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், 8 புள்ளி 19 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சி வெறும் 6.58 சதவீத வாக்குகளை மட்டும் பெற்ற நிலையில், இந்த முறை 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, 12 வது மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 228

    0

    0