நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்.. திருச்சி எஸ்பி குற்றச்சாட்டு : கொந்தளித்த இடும்பாவனம் கார்த்திக்!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2024, 9:06 pm

ஐபிஎஸ் மாநாட்டில் திருச்சி எஸ்பி வருண்குமார் நாம் தமிழர் கட்சி குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாடு முழுவதிலிருந்து நூற்றுக்கணக்கான அதிகாரிகள் பங்கேற்றனர். திறமையான இளம் மாவட்ட எஸ்.பிக்கள் இந்த மாநாட்டிற்கு சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தனர். குற்ற தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தங்களது யோசனைகளை முன்வைத்து பரிசீலனை செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம், சைபர் குற்றங்கள் மற்றும் இணையதள மிரட்டல்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஒரு குழுவை தலைமையேற்ற 22 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்தது. அந்த குழுவின் தலைவராக, திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் சைபர் குற்றங்களை கண்காணிக்கவும் தடுக்கும் முறைகள் குறித்து ஆலோசனைகளை விளக்கினார்.

ஆனால், இதே நிகழ்ச்சியில், அவர் பகிரங்கமாக கூறிய சில கருத்துகள் பெரும் விவாதத்திற்குள் தள்ளின. திருச்சி எஸ்.பி. வருண்குமார், நாம் தமிழர் கட்சி தொடர்பான விமர்சனங்களை வெளியிட்டார். தனது குடும்பத்தினர் உட்பட, அந்த கட்சி ஏற்படுத்திய சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாகவும், அந்தக் கட்சியின் நடவடிக்கைகள் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் கூறினார்.

இந்த பேச்சு, மாநாட்டில் பங்கேற்ற இந்தியா முழுவதிலுமிருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நாம் தமிழர் கட்சியை கண்காணிக்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பெரிய அதிர்வுகளை உருவாக்கியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக், Dear Strict (?) Officer! திமுகவுக்கு மூன்றாம்கட்ட அல்லக்கை வேலை பாக்குறது, ஆடியோக்களை விட்டு அற்பச் சுகம் காணுறது, மொறச்சு பாக்குற மாதிரி போட்டோ போடுறது, வாட்சப்ல ஸ்டேட்ஸ் வச்சுட்டு, அத செய்தியா போடச் சொல்லி பத்திரிக்கையாளர்கள்கிட்ட லாபி பண்றது, பிரிவினைவாத இயக்கம்ன்னு டெல்லில போய் பினாத்துறது, பொய் வழக்குப் போட்டு கைதுபண்றது, கைதுபண்றவங்கள கண்ணகட்டிட்டு அடிச்சு சித்ரவதை பண்றதுன்னு சில்லறைத்தனமா எச்சவேலை பாக்குறத விட்டுட்டு, அரசியலுக்கு நேரடியா வாங்க Bro! துணிவு, திராணி ஏதும் இருந்தா உங்க பதவிய ராஜினாமா பண்ணிட்டு, நேரடியா அரசியலுக்கு வாங்க..மோதுவோம்.. அதவிட்டுட்டு, கோழைத்தனமா திமுக அரசோட முதுகுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டு வாய்ச்சவடால் விடாதீங்க..

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?