பட்டதாரி பெண்ணுக்கு வாய்ப்பளித்த நாம் தமிழர் கட்சி : இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2023, 7:15 pm
நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மேனகா நவநீதன் என்பவர் போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் அக்கட்சியின் தலைவர் சீமான் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டி பணிமனையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து நாம் தமிழர் சார்பாக வேட்பாளர் ஆக போட்டி யிட உள்ள பெண் வேட்பாளர் மேனகா என்பவர் போட்டியிட உள்ளார் என்றும் பிஎஸ்சி ஃபேஷன் டெக்னாலஜி கல்வி பயின்ற மேனகா நவநீதன் ஏற்கனவே அக்கட்சியில் மகளிர் பாசறையின் இணைச் செயலாளராக பணியாற்றி உள்ளதும் மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் நண்பர் ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் களப்பணியில் ஐந்து ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.