மீண்டும் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு.. நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைதால் பரபரப்பு….!!!

Author: Sudha
14 ஆகஸ்ட் 2024, 3:15 மணி
Quick Share

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அப்போது சாட்டை துரைமுருகனிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பல்வேறு உள்விவகாரங்களை சீமான் உள்ளிட்டோர் செல்போனில் பேசிய பேச்சுகளின் ஒலிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து வெளியானது.

திருச்சி எஸ்பி வருண்குமார் திட்டமிட்டே இந்த பதிவு செய்யப்பட்ட போன் உரையாடல்களை வெளியிட்டு வருவதாக சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டினார். அத்துடன் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஜாதிய நோக்கத்துடன் செயல்படுவதாக சீமான் பொது இடங்களில் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரிக்கை விடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கு எஸ்பி வருண்குமார் பதில் கொடுத்ததுடன் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீசும் அனுப்பினார்.

இந்த நிலையில் எஸ்பி வருண்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன் என்பவரை திருச்சி தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 22 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீதும் திருச்சி தில்லைநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த எஸ். ராமலிங்கபுரத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திருப்பதி மற்றும் கண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Divorce விவாகரத்து வழக்கில் டுவிஸ்ட்.. ‘ஓ மை கடவுளே’ பட பாணியில் கோர்ட்டில் நடந்த சம்பவம்!!
  • Views: - 186

    0

    0