ஈஷாவை பார்வையிட்ட கட்டிடக்கலை மாணவர்கள்… நாகை கீழ்வேளூரில் இருந்து கட்டிடக்கலை கற்றல் ஆய்விற்காக வருகை!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 6:01 pm

கோவை : நாகை கீழ்வேளூர் பிரைம் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்று (பிப் 25) கோவை ஈஷா யோகா மைய வளாகத்தை பார்வையிட்டனர்.

ஈஷா யோகா மையத்திற்கு இன்று காலை கீழ்வேளூர் பிரைம் கல்லூரியில் இருந்து 28 கட்டிடக்கலை மாணவர்கள் மற்றும் 2 கல்லூரி விரிவுரையாளர்கள் வந்திருந்தனர்.

அவர்கள் ஈஷா மைய வளாகத்தில் உள்ள சூர்ய குண்டம், நந்தி, லிங்கபைரவி, சந்திரகுண்டம், தியானலிங்க மற்றும் ஆதியோகி திருவுருச் சிலை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். அவர்களுக்கு அவ்விடங்களின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஆன்மீக நோக்கத்தில் அறிவியல் ரீதியாக நுணுக்கமான கட்டிடக்கலை அம்சங்களுடன் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தருகின்றனர்.

ஈஷாவின் கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் அதன் நுணுக்கங்களை வருகை தரும் பலரும் வியந்து ரசித்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி