நாகையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை ; பெண் கைது… 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல்…!!!

Author: Babu Lakshmanan
5 November 2022, 9:18 am

நாகை ; நாகையில் பாண்டிச்சேரி மதுபாட்டிகளை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

நாகையில் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுப்பாட்டில்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாகை அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் ஒச்சாம்மாள் என்பவர் காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட மதுப்பாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்து 200 க்கும் மேற்பட்ட குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…