ரேஷன் கடையில் அரிசியை அளந்து போடும் குழந்தை தொழிலாளி… வைரலாகும் ஷாக் வீடியோ.. நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!!
Author: Babu Lakshmanan24 April 2024, 3:55 pm
நாகை அருகே நியாயவிலைக்கடையில் பள்ளி சிறுவன் அரிசியை அளந்து விற்பனையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூர் கிராமத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு அரசின் நியாயவிலை கடையில் பணிபுரிபவர் சுமதி. இந்த கடையில் குழந்தை தொழிலாளராக சுமதி சிறுவனை பயன்படுத்துவதாக புகார்கள் இருந்து வந்தது.
இந்த நிலையில், நியாயவிலை கடையில் ஒரு சிறுவன் அரிசி அளந்து கொடுத்து பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியுள்ளது.
மேலும் படிக்க: காங்கிரசுடன் சேர்ந்து வாக்கு வங்கி அரசியல் செய்யும் திமுக… விவசாயிகளுக்காக குரல் கொடுக்காதது வேதனை ; ஜிகே வாசன் குற்றச்சாட்டு..!!
சிறுவன் அரிசியை அளந்து கொடுக்க, பணியாளர் சுமதி பில் போட்டு பணம் வாங்கும் வேலையை பார்த்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், பள்ளி சிறுவனை குழந்தை தொழிலாளராக பயன்படுத்திவரும் அங்காடி பணியாளர் சுமதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.