மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட முதியவர்… சாலையில் விழுந்த போது பேருந்து ஏறி பரிதாப பலி ; ஷாக் வீடியோ!!!

Author: Babu Lakshmanan
20 November 2023, 2:37 pm

நாகையில் சாலையின் ஓரமாக சென்ற நபரை, காளைமாடு ஒன்று கொம்பால் முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அவர் அரசு பேருந்து சக்கரத்தின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நாகப்பட்டினம் மேலக்கோட்டைவாசலை சேர்ந்தவர் சபரிராஜன் (55). இவர் வழக்கம்போல் பெருமாள் கோவில் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு, தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, மேலகோட்டை வாசல் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது, திடீரென அங்கு சாலையில் நின்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று, சபரி ராஜனை குத்தி தூக்கி வீசியது.

அப்போது, திருவாரூரில் இருந்து நாகை நோக்கி வந்த அரசு பேருந்து சக்கரத்தில் சபரி ராஜன் விழுந்துள்ளார். இதில் பேருந்து பின் சக்கரம் சபரிராஜனின் தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்தில் சென்றவர்கள் பேருந்து திடீரென குலுங்கியதை அடுத்து ஓட்டுனர் அந்த பேருந்தை நிறுத்தி பார்த்துள்ளார். பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததை கண்டு ஓட்டுனர் உள்ளிட்ட பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகை நகர போலீசார், கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரியும் அளவுக்கு அதன் உரிமையாளர்கள் அலட்சியமாக இருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஒருவரின் உயிர் போக காரணமாக இருந்த காளை மாட்டின் உரிமையாளர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

https://player.vimeo.com/video/886369526?badge=0&autopause=0&quality_selector=1&player_id=0&app_id=58479

நாகையில் சாலையில் நடந்து சென்ற நபரை காளைமாடு ஒன்று தனது கொம்பால் குத்தி தூக்கி வீசி அவர் அரசு பேருந்து சக்கரத்தின் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 444

    0

    0