நாகையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியை காம இச்சைக்கு அழைக்கும் ஆசிரியரின் செல்போன் உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அக்கல்லூரியில் உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரியும் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும், மாணவிகளும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில், ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதிஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆசிரியர் சதிஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பதும், அதற்கு அந்த பெண் நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறிவதும், அதற்கு அந்த ஆசிரியர் வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்திய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருகட்டத்தில் ஆசிரியரின் தொல்லையில் இருந்து நழுவுவதற்காக, தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லி அந்த மாணவி சமாளிக்கவே, அதையும் புரிந்து கொள்ளாத அந்த காமவெறி கொண்ட ஆசிரியர், பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைப்பது போன்ற பேச்சுக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிக்கு, அதே கல்லூரி ஆசிரியர் பாலியல் வன்புணர்வோடு செல்போனில் தொல்லை கொடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ வைரலாகிய நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வந்த ஆசிரியர் சதீஷுக்கு எதிராக மாணவ, மாணவிகள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
உச்சகட்ட வைப்பில் அஜித் ரசிகர்கள் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் நேற்று இரவு வெளியாகி…
This website uses cookies.