வாத்தி ரைடு.. வாத்தி ரைடு.. புள்ளிங்கோ Hair Style… சலூனுக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியை!!

Author: Babu Lakshmanan
24 January 2023, 10:25 am

நாகையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியையின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடில் ஆண்டனிஸ் என்கின்ற ஆண்கள் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இதில் படிக்க கூடிய மாணவர்கள் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வெட்டி பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இது போன்று முடி வைத்திருந்தனர்.

அவர்களை அழகாக முடி வெட்டி வரும்படி பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கி உள்ளனர். இதனை மாணவர்கள் சட்டை செய்யாமல் புள்ளிங்கோ ஸ்டைலிலே பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் புள்ளிங்கோ மாணவர்களை நாகையில் உள்ள சலூன்கடைக்கு அழைத்து வந்து தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு முடி வெட்டி உள்ளனர். முடி வெட்டுவதை பார்த்த மாணவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

புள்ளிங்கோ மாணவர்களை ஆசிரியை சலூன் கடைக்கு அழைத்து வந்து முடி வெட்டி விட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Trisha emotional Instagram post நீ இல்லாமல் நான் எப்படி வாழ…மனம் உடைந்த திரிஷா…வைரலாகும் பதிவு…!
  • Views: - 521

    1

    0