‘காதல் ரோமியோ’ காசி வழக்கில் புதிய திருப்பம் : குவைத்தில் இருந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்ட காசியின் கூட்டாளி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2022, 5:56 pm

தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவத்தை அடுத்து உலுக்கிய சம்பவம் நாகர்கோவில் காசியின் பாலியல் வழக்கு. ஏராளமான கல்லூரி மாணவிகள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டவரில் தனது கட்டுமஸ்தான உடலை காட்சி சுண்டி இழுத்து பெண்களிடம் நெருங்கி பழகி அதை வீடியோ எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசி தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

கோழிக்கடை நடத்தி வரும் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசி, அம்பானி ரேஞ்சுக்கான ஆடம்பர வாழ்க்கையைப் பலர் ஆச்சரியத்துடன் தான் பார்த்தனர்.

இந்த நிலையில் தான் 2020 ஆம் ஆண்டு காசிக்கு சென்னையை சேர்ந்த பெண் மருத்துவா் ஒருவர் மணி கட்டி சிறைக்குத் தள்ளினார். காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் தர முன்வராத நிலையில் அந்த பெண் மருத்துவர் நாகர்கோவில் எஸ்.பி ஸ்ரீநாத்-க்கு மெயில் மூலம் புகார் கொடுத்தார்.

பின்னர் காசி கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்ஃபோன் மற்றும் ஹார்ட்டிஸ்க்கில் அவனால் சீரழிக்கப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள், படங்கள் இருந்தன.

இதையடுத்து தீவிரமடைந்த அந்த வழக்கு, பின்னர் மேலும் பல பெண்கள் காசி மீது புகார் கொடுத்தனர். மாதர் சங்கத்தினரின் போராட்டங்களால் காசியின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் குவைத்தில் இருந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்த காசியின் நண்பர் கௌதம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான். காசி ரகசியமாக எடுக்கும் வீடியோக்களை அவனது நண்பர்கள் டேசன் ஜினா, தினேஷ், கௌதம் ஆகியோருக்கு அனுப்பியுள்ளது தெரியவந்தது.

இதில் கௌதம் மட்டும் குவைத்தில் வேலைபார்த்து வந்த நிலையில் அவனை மட்டும் இரண்டு ஆண்டுகளாக கைது செய்ய முடியாத நிலை இருந்தது. காசி சொன்னபடி அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை கௌதம் வெளியிட்டு வந்துள்ளான்.

இந்நிலையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் வந்த கௌதமை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Ilaiyaraja Talk About Yuvanshankar raja யுவன்சங்கர் ராஜாவை மேடையில் பங்கம் செய்த இளையராஜா.. ராஜா ராஜாதான் யா..!!