டிவியில் பேட்டி வரவேண்டும் என்பதற்காக எதையாவது உளறக்கூடாது : திருமாவளவனுக்கு நயினார் பதிலடி!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2025, 12:11 pm
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என செல்வ பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, மக்களுக்கு ஆதரவான திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசு செய்யும். ஹைட்ரோ கார்பன் அனுமதி கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். அவர்களுடைய கூட்டணி ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று என கூறினார்.
இதையும் படியுங்க: ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!
எல்லோருக்கும் எல்லாம் என்ற உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு, எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது தவறில்லை. ஆனால் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் சொல்வது முக்கியமில்லை எல்லோருக்கும் கிடைப்பது மாதிரி செய்ய வேண்டும் என பதிலளித்தார்.

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அதில், நாங்கள் கருத்து சொன்னால் சரியாக இருக்காது. அது அரசாங்கம் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையேயான பிரச்சனை.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பூத் கமிட்டி மீட்டிங் குறித்த கேள்விக்கு, இந்திய திருநாட்டில் எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது எழுத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் எல்லாம் உள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் நாம் கருத்து சொல்ல முடியாது.
இலை மீது தாமரை மலரும் என்பது குறித்த கேள்விக்கு, இலையும், தாமரையும் கூட்டணியாக சேர்ந்து அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது அர்த்தம். தாமரைப்பூ உள்ளது என்றால் கீழே இலை இருக்கத்தான் செய்யும்.
நீங்கள் கேள்வி கேட்கும் முன்பு நான் பதில் கூறுகிறேன். இட ஒதுக்கீடு குறித்து இபிஎஸ் மற்றும் அமித்ஷா பேசிக்கொள்வார்கள்.

திமுக மக்களுக்கு எதிராக செயல்படுகிறது முதலில் அகற்றப்பட வேண்டும். பழைய கதையை திண்டுக்கல்லில் புதிதாக பூட்டை திறக்கிறீர்கள்.
காஷ்மீர் குறித்து திருமாவளவன் கருத்து கூறுவது குறித்த கேள்விக்கு, அனைவருக்கும் நாட்டு பற்று என்பது வேண்டும். தேசப்பற்று தேச உணர்வு என்பது வேணும். அதை புரிந்து கொண்டு எல்லா தலைவர்களும் நாட்டின் நன்மை கருதி பேச வேண்டும். தொலைக்காட்சியில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது.
தெலுங்கானா முதல்வர் பேசுவதை பார்த்தீர்களா? பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பாரத பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு தர வேண்டும் என ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தேச உணர்வுக்காக பேசுகிறார். ரேவந்த் ரெட்டி போன்ற நபர்களுக்கு எனது வணக்கங்கள்” என தெரிவித்தார்.
