சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு.. சந்திக்க வந்த அமைச்சரிடம் சொன்ன கோரிக்கை : நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 9:19 pm

பொதுவாழ்வில் நேர்மையும், தூய்மையும் கொண்ட வெகுசில அரசியல்வாதிகளுள் முக்கியமானவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.

97 வயதான நல்லகண்ணு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தன்னை சந்தித்து நலம் விசாரிக்க வந்த அமைச்சரிடமும் பொதுநலக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நல்லகண்ணுவைச் சந்தித்து உடல் நலம் பற்றி விச்சரித்த போதும், பொதுமக்கள் நலனுக்காக ஒரு கோரிக்கையை வைத்துள்ளார் நல்லகண்ணு.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என்பதால் அங்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அமைச்சரிடம் நல்லகண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.

உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சூழலிலும், தன்னைச் சந்திக்க வந்த அமைச்சரிடம் நல்லகண்ணு, மக்கள் நலனுக்காக கோரிக்கை விடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!