கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!
Author: Udayachandran RadhaKrishnan2 April 2025, 6:26 pm
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன் தொடங்கி திருவிழா தொடர்ந்து நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று குண்டம் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவர், சிறுமியர், இளம் பெண்கள் இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் வேண்டுதலை நிறைவேற்ற தீ மிதி திருவிழாவில் பங்கேற்று தீ மிதித்த நிலையில் ஆவரங்காடு பகுதியை சேர்ந்த குமார் என்ற பக்தர் தனது ஆறு மாத பெண் குழந்தையுடன் தீ மிதிப்பதற்காக வந்தார்.
அப்போது அக்னி குண்டத்தில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி குண்டத்தில் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் கால் தடுமாறி கீழே விழுந்தார்.
அதிர்ச்சி அடைந்த சுற்றி இருந்த பொதுமக்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இதனையடுத்து அங்கிருந்த கோவில் ஊழியர்கள் உடனடியாக குழந்தையையும், பக்தர் குமாரையும் பத்திரமாக அங்கிருந்து மீட்டனர் .
குழந்தையுடன் தீ குண்டத்தில் தவறி விழுந்த நபர்!#Trending | #namakkalnews | #festival | #updatenews360 pic.twitter.com/gqRf1XJoiS
— UpdateNews360Tamil (@updatenewstamil) April 2, 2025
மேலும் அக்னி குண்டத்தின் வெளிப்பகுதியில் விழுந்ததால் இருவரும் சிறு காயங்களுடன் தப்பித்தனர். இதன் காரணமாக கோவில் வளாகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.