‘நீ அந்த ரோட்டுல தான வருவ’… பணத்தை தராத நபரை சாலையில் வைத்து மகனுடன் சேர்ந்து தாக்கிய திமுக பிரமுகர்…!!
Author: Babu Lakshmanan30 March 2023, 8:31 pm
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஏலச்சீட்டு பணத்தை செலுத்தாத நபர் மீது திமுகவை சேர்ந்த தந்தை, மகன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இதையடுத்து, அவரது வீட்டின் அருகே உள்ள திமுக நகர் மன்ற உறுப்பினரின் கணவர் நடத்தி வந்த மாதாந்திர ஏல சீட்டில் 3 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு போட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஏலச்சீட்டு எடுத்துவிட்டு 6 மாத மாக ஏலச்சீட்டு தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சீட்டு பணம் கேட்க சென்ற சண்முகத்தினை சண்முகராஜன் அவமரியாதை செய்ததால் அவரது மகன் தங்கமணி கோபத்தில் சீட்டு பணம் தர மறுத்த சண்முகராஜ் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, திமுகவை சேர்ந்த தந்தை, மகன் ஆகிய இருவரும் சேர்ந்து சண்முகராஜை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தனர்.
இதன் பின்னர் பள்ளிபாளையம் போலீசார் காவல்நிலையத்தில் சீட்டு பணம் தரமறுத்து தாக்குதல் செய்ததாக திமுக நகர்மன்ற உறுப்பினரின் கணவரும் – மகனும் சேர்ந்து புகார் கொடுக்க சென்ற நிலையில், புகார் ஏற்க மறுத்து இரு தரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து வைத்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.