கள்ளக்காதலுக்கு இடையூறு… கண்ணை உறுத்திய ரூ.12 லட்சம் ; கணவனை தீர்த்து கட்டிய மனைவி ; ஊராட்சிமன்ற தலைவர் உள்ளிட்ட 3 கைது
Author: Babu Lakshmanan7 May 2024, 7:13 pm
ராசிபுரம் அருகே பணத்திற்காகவும், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நம்பர்:3 குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் (46) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி செல்வி (36) என்ற மனைவியும், விமல்(17) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த நம்பர்:3 குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி ஆகிய இருவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சட்டசிக்கல்களில் சிக்க வைக்கும் பாஜக அரசு… எதிர்கட்சிகளை முடக்குவே திட்டம் ; எம்பி கார்த்தி சிதம்பரம்!!
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த நிலையில், தற்போது பழனிவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது விவசாய நிலத்தை 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு அதில் வந்த பணத்தை வைத்து தினம்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
கணவன் வேலைக்கு செல்லாத நிலையில், மனைவி அவ்போது வேலைக்கு செல்லுமாறு கூறிவந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் செல்வி கள்ளக்காதலுடன் அவ்வப்போது பழனிவேல் வீட்டில் தனிமையில் இருந்து வந்த நிலையில், தற்போது பழனிவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், தனிமையில் சந்திக்க முடியாமல் இருந்து வந்தனர். நிலத்தை விற்ற பணத்தையும் தராமல், வேலைக்கும் செல்லாமல் இருந்த கணவனை, கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி செல்வி தீர்த்து கட்ட திட்டம் தீட்டியுள்ளார்.
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரவி (30) என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி அழைத்து வந்து ரவிக்கு மது வாங்கி குடுத்து பழனிவேலை கொலை செய்ய கூறியுள்ளார். மது போதையில் இருந்த ரவி ஆயிபாளையம் அருகே சென்ற பழனிவேலை பின் தொடர்ந்து கத்தியால் குத்தியை நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், வெண்ணந்தூர் காவல்துறையினர் பழனிவேலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் பழனிவேல் தனது விவசாய நிலத்தை 30 லட்சம் ரூபாய் விற்பனை செய்து, அதில் வந்த பணத்தை 15 லட்சத்திற்கு மேல் செலவழித்துள்ளதாகவும், தற்போது அவரது கையிருப்பில் 12 லட்சம் ரூபாய் உள்ள பணத்தை மனைவி செல்வி கேட்டு தராத செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கணவனை கொலை செய்ய கள்ளக்காதலுடன் சேர்ந்து திட்டம் தீட்டியதாக மனைவி செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூட்டை தூக்கும் வேலை செய்து வந்ததன் பழக்கத்தின் பேரில் ரவி இந்தக் கொலையை செய்துள்ளார். பின்னர், பழனிவேலை கொலை செய்வதற்கு எவ்வித பணம் வழங்கவில்லை எனவும், தான் மது அருந்து விட்டு கொலை செய்ததாக போலீசாரிடம் ரவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தகாத உறவிற்கும், பணத்திற்கும் கட்டிய கணவனை கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.