கன்னத்தில் பளார் விட்டது போல கூறியுள்ளார் முதலமைச்சர் : நாஞ்சில் சம்பத் நறுக்!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2025, 11:10 am

கோவை, கவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் பொதுக் கூட்டம் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசும்போது :

ஒன்றிய அரசு ஓர வஞ்சனையாக, மாற்றான் தாய் பிள்ளையாக தமிழகத்தை வஞ்சிக்கிறது. நாடாளுமன்றத்தில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தடித்த வார்த்தைகளில், uncivilized, undemocratic, என்று தமிழர்களை அழுத்தச் சொற்களால் அவர் அவமானப்படுத்துகிறார்.

ஒன்றிய அமைச்சர் ஒருவர், ஒரு தமிழ் தேசிய இனத்தை வரலாற்றில் நாகரீகத்திற்கு பதியப்பட்ட சமூகத்தை, uncivilized என்று கூறுகிறார், சந்தை, சாவடி, மந்தை, என்று இங்கு நின்று பேசினாலும் என் மனம் வருத்தப்படாது.

நாடாளுமன்றம் என்பது எங்களுடைய வீடு, அங்கு நின்று கொண்டு ஒரு மத்திய அமைச்சர் தமிழ்நாட்டை பேசினால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

2,252 கோடி அரசு பள்ளியில் பயிலும் 43 லட்சம் மாணவர்களுக்கு பயன்பட வேண்டிய தொகையை, மும்மொழியை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தர முடியும் என்று ஒரு நிபந்தனையை விதித்து இருக்கிறார்கள்.

ஒரு நெருக்கடிக்கு நம்மை தள்ளுகிறார்கள். ஸ்டாலின் அவர்களோ 10,000 கோடி தந்தாலும், மும்மொழியை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டேன் என அவர்களை கன்னத்தில் அறைந்ததை போல கூறி இருக்கிறார். அதற்கு எதிர்வினை ஆற்றுகிறேன் என்ற பெயரால், uncivilized, and undemocratic போன்ற வார்த்தைகளை பேசுகிறார்.

நீ ஏற்கனவே ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், வாழை இலை போட்டு சோறு வைத்து கூட்டு வைத்து, அதை தமிழன் வலித்து தின்னுவதைப் போன்று ஒரு சித்திரத்தை தேர்தல் பிரச்சாரத்தில் நீ முன் வைத்தாய்.

அதுமட்டுமல்ல உலகப் புகழ்பெற்ற புவனேஸ்வரில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலின் சாவியை, தமிழன் கையில் இருக்கிறது என்று, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தமிழனை குற்றம் சாட்டினார்.

சரி மனிதவள மேம்பாட்டு துறை தான் அதை செய்கிறார்கள் என்றால், தேர்தல் பிரச்சாரத்தின் போது அதை பிரதமரும் வழிமொழிகிறார்.அதனால் தமிழர்களை இந்த நாட்டில் அவமதித்து, துடிக்கின்ற எங்களுடைய ஆகாயத்தை அழுக்காக்குவதற்கு துடிக்கின்ற, இந்த அரசியல் அநாகரிகத்தை, எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

நமக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை, நாம் யாருக்கும் எந்த நெருக்கடிகள் எப்பொழுதும் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் இந்தி பிரச்சார சபா இருக்கிறது.விருப்பப்படும் குழந்தைகள் மொழியை, கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

இரு மொழி கொள்கை தான் நாட்டில் இருக்கும், என்று நம் முன்னோர்கள் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இந்திய ஏன் படிக்க வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. வட இந்தியர்களுக்கு இந்தி மொழி தாய்மொழி. அவர்களுக்கு தாய்மொழி படிப்பு மொழி அரசியல் மொழி என அனைத்தும் இந்தி தான்.

தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய நாங்கள் எதற்காக இரண்டு மொழி போதும் என சொல்லக் கூடாது. உங்களுடைய மொழியை இங்கு திணிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது.

ஒரு மொழியை கற்றுக் கொள்ள, நாட்டில் ஒரு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறீர்கள் என்றால் இதற்கு பின்னர் ஏதோ சதித்திட்டம் இருக்கிறது என்பதை தி.மு.க புரிந்து கொண்டு இருக்கிறது.

1938 ல் ராஜகோபாலாச்சாரி, அவருக்கு தங்கத் தாலான கைத்தடி பரிசாக கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வரும் போது அவர் அந்த தங்கத் தடியை அங்கேயே வைத்து விட்டு வெளியேறினார். அவ்வளவு பரிசுத் தமான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி.

ஆனால் இன்று இருக்கக் கூடிய கவர்னர் சமோசா கொடுத்தால் கூட எடுத்துச் சென்று விடுகிறார்.1938 ல் 155 அரசு பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் என அறிவித்தார், இதைப் பார்த்த தந்தை பெரியார் துடித்துப் போனார்.

அறிஞர் அண்ணா எரிமலை குழம்பாக, வெடித்து சிதறினார். ராஜாஜி எங்களுக்கு மூதறிஞர். ஹிந்தியை திணிக்க வந்ததால் எதிர்க்க வேண்டிய கட்டாயமாகிற்று. தமிழனுக்கு இராமாயணம் தெரியும் என்றால், அது கம்பெனி பிடித்ததால் அல்ல ராஜாஜியை பிடித்ததால், ஆனால் அவரே இந்த பாவத்தை செய்தார்.

போராட்டத்திற்கு பெரியார் தேதி குறித்தார், 1938 உடன் தாளமுத்துவும், நடராஜனும் சிறைச் சாலையில் இறந்து போனார்கள். இதுபோல மொழிகளுக்கு போராடி நம்மளுடைய மொழி தியாகிகள், உயிரையே தியாகம் செய்தனர்.

Nanjil Sampath Criticized Central Government

அதுபோல இப்பொழுதும் மொழிக்கு எதிராக ஒன்றிய அரசு எப்பொழுதும் செயல்பட முடியாது என்பதை நான் தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.

  • Cibi Malayil about Gunaa ‘குணா’ படம் என்னுடைய படம்…கோவையில் மலையாள இயக்குனர் பர பர பேட்டி.!
  • Leave a Reply