மின்கட்டணம் செலுத்தாத நன்னிலம் அரசு கல்லூரி… ப்யூஸ் கேரியலை பிடுங்கிய அதிகாரிகள்… மின்சாரமின்றி மாணவர்கள் அவதி!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 4:34 pm

திருவாரூர் : நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளானர்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரியில் பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.

மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இரண்டு வேளையும் நடைபெறும் கல்லூரியில், மதியம் நடைபெறும் வகுப்பிற்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu