‘அமித்ஷா சொன்ன கருத்தை திரும்ப பெற வேண்டும்’: புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு..!!
Author: Rajesh9 April 2022, 4:47 pm
நாட்டில் ஹிந்தி திணிப்பை மக்கள் ஒருக்காலமும் ஏற்க மாட்டார்கள் என்றும் ஹிந்தி மொழி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்தை திரும்பபெற வேண்டும் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராளுமன்ற மொழிகளிக்கான நிலைக்குழுவில் பேசும்போது நாட்டில் இந்தி மட்டும் தான் முதன்மையான மொழியாக இருக்க வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் 70% கோப்புகள் அனுப்பப்படுகின்றனர். அமைச்சரவை கூட்டத்தில் கூட ஹிந்தியில் கோப்புகள் கொடுக்கப்படுகின்றனர். எனவே ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி மொழி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்ன கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி மாநிலங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், மாநிலத்திற்கு மாநிலம் மொழி மாறுகிறது.
ஹிந்தி மொழி குறித்து அமித் ஷா கூறிய கருத்து அனைத்து மாநில மொழிகளுக்கு எதிரான கருத்தாக உள்ளது என்றார். மேலும், ஹிந்தி குறித்து அமித் ஷா கூறிய கருத்து மாநில உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது என்றும் நாடடில் ஹிந்தி திணிப்பை மக்கள் ஒருக்காலமும் ஏற்க மாட்டார்கள் அமித் ஷா அவரது கருத்தை திரும்பபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரி மக்களால் தாங்க முடியாத நிலையில் மின் கட்டனம் உயர்ந்துள்ளது என்றும் மின் கூட்டண உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்படும் சூழல் எற்படும் நிலை உள்ளது. எனவே மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை வாபஸ் பெற வேண்டும். இதேபோல் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் புதுச்சேரியில் நில அபகரிப்பு நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
0
0